உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பூட்டிய வீட்டிற்குள் முதியவர் சடலம்

 பூட்டிய வீட்டிற்குள் முதியவர் சடலம்

புதுச்சேரி: புதுச்சேரி, லில்லி தொலாந்தால் வீதியை சேர்ந்தவர் லில்லி ஜாக்குவிஸ், 72. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுடன், மனைவி பிரான்சில் வசித்து வருகிறார். தினமும் அவரது மனைவியுடன் மொபைல் போனில் லில்லி ஜாக்குவிஸ் பேசிவந்துள்ளார். இந்நிலையில், மனைவி லில் புளோரன்ஸ் கணவரின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அவர் எடுக்கவில்லை. சந்தேகமடைந்தவர் அவர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவரது உறவினர்கள், வீட்டில் சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லில்லி ஜாக்குவிஸ் படுக்கையில் சடலமாக கிடந்தார். புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ