உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் தேர்தல் :தமிழக டாஸ்மாக் கடைகள் மூடல்

 புதுச்சேரியில் தேர்தல் :தமிழக டாஸ்மாக் கடைகள் மூடல்

புதுச்சேரி:புதுச்சேரியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள தமிழக டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துவங்கன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: புதுச்சேரியில் 9ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. தேர்தலை விதிமீறல்களை தடுக்க, 78 பறக்கும் படைகள், 40 நிலை கண்காணிப்பு குழுக்கள், 50 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்டை மாநில எல்லைப்பகுதியில் 35 இடங்களில் சோதனை சாவடி அமைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. கடைசி 72 மணி நேரத்தில் தீவிர கண்காணிப்புக்காக 36 கூடுதல் பறக்கும் படைகளும், புதிதாக 30 இருசக்கர வாகன பறக்கும் படைகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்காக, புதுச்சேரியில் மதுபானக்கடைகள் 3 நாட்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல் புதுச்சேரியிலிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள விழுப்புரம், கடலூர் பகுதிகளில் உள்ள தமிழக டாஸ்மாக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை