உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.பி.எல்., கிரிக்கெட் போட்டி ஏனாம் ராயல்ஸ் அணி வெற்றி

பி.பி.எல்., கிரிக்கெட் போட்டி ஏனாம் ராயல்ஸ் அணி வெற்றி

வில்லியனுார்: பி.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் நேற்று ஜெனித் ஏனாம் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.பாண்டிச்சேரி பிரிமியர் லீக் 2வது சீசன், துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி வரை பகல் இரவு ஆட்டங்களாக நடக்கிறது. நேற்று மதியம் நடந்த போட்டியில் ஊசுடு அக்கார்ட் வாரியர் அணியும் - ஜெனித் ஏனாம் ராயல்ஸ் அணியும் மோதின.முதலில் விளையாடி ஊசுடு அக்கார்டு வாரியர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அந்த அணி வீரர் வேதாந்த் பரத்வாஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மாலை நடந்த போட்டியில் மாகே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் - ரூபி ஒயிட் டவுன் அணியும் மோதின. இதில், ரூபி ஒயிட் டவுன் அணி வெற்றி பெற்றது.இன்று பிற்பகல் 2:00 மணிக்கு நடக்கும் போட்டியில் ரூபி ஒயிட் டவுன் அணியும் - காரைக்கால் கிங்ஸ் அணியும், மாலை 6:00 மணிக்கு நடக்கும் போட்டியில் மாகே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் - வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !