உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பொறியாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்

 பொறியாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில், பொறியாளர்கள், கட்டக்கலை நிபுணர்கள், ஒப்பந்ததார்களிடம் கருத்து கேட்பு கூட்டம், ஜெயராம் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. ரமேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ ., அசோக்பாபு நோக்கவுரையாற்றினார். பொறியாளர்கள், கட்டக்கலை நிபுணர்கள், ஒப்பந்ததாரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். பொறியாளர்கள் பேசுகையில், 'கடந்த காலத்தை ஒப்பிடும் போது இந்த 5 ஆண்டுகளில் பொதுப்பணித் துறையில் சாலை, கட்டடம் உள்ளிட்ட பல பணிகள் நடந்துள்ளது. நிதி பற்றாக்குறை இல்லாமல் தங்களுக்கு வழங்க வேண்டிய பணம் உடனுக்குடன் வழங்கப்பட்டதால், எங்களால் உடனடியாக வேலை முடிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்தில் கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. சிறு சிறு விதிமீறல்களுக்கு அபாரதம் விதித்து அனுமதி தர வேண்டும். அவ்வாறு தராததால் நிறைய ஒப்பந்ததார்கள் தொழிலை விட்டு வெளியே சென்றுள்ளனர். அதனால் புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்தில் கட்டடங்களுக்கு அனுமதியை உடனே தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். இதனை கேட்ட சபாநாயகர் செல்வம் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், வரும் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கூட்டத்தில், இந்திய கட்டுனர்சங்கத்தின் புதுச்சேரி கிளை தலைவர் வேல்முருகன், செயலளரர் அசோகன், பாண்டிச்சேரி கான்கரீட் சங்கத் தலைவர் சுரேஷ், ஒப்பந்ததார் சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர். செல்வராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை