மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
1 minutes ago
புகார் பெட்டி
1 minutes ago
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் விழா
1 minutes ago
கண்டமங்கலம்: சின்னபாபுசமுத்திரம் ரயில்வே கேட்டை அகற்றினால் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து குழுவின் தலைவர் முருகையன் தென்னக ரயில்வேயின் கூடுதல் மண்டல பொறியாளரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; சின்னபாபுசமுத்திரம் ரயில்வே கேட் (எல்.சி என் 29 கேட்) உள்ளது. தற்போது இந்த கேட்டை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைக்க முயற்சி எடுப்பதாக அறிகிறோம். சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும். 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்படும் நெல், கரும்பு, ஆகியவற்றை அறுவடை செய்து டிராக்டர், டிரைலர், லாரிகளில் கொண்டு செல்லவும் மேலும் நெல் அறுவடை இயந்திரங்கள் இந்த ரயில்வே கேட் வழியாக தான் சென்று வர வேண்டும். இந்த கேட்டை மூடிவிட்டு சுரங்கப்பாதை அமைத்தால் 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுவர். கோயில் திருவிழா சுவாமி ஊர்வலங்கள் செல்வது தடைபடும். எனவே ரயில்வேகேட்டை அகற்றிவிட்டு, சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். ரயில்வேதுறை சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டால் இப்பகுதியை சேர்ந்த பல்வேறு கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
1 minutes ago
1 minutes ago
1 minutes ago