மகனுக்கு வலிப்பு நோய் தந்தை தற்கொலை
காரைக்கால்: காரைக்காலில் மகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்ட மன வேதனையில் தந்தை துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்கால், கிளிஞ்சல் மேடு, சுனாமி நகரை சேர்ந்தவர் மணிவேல், 39; மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பாக்கியவதி. இவர்களுக்கு ஈஸ்வரன் மற்றும் எஷ்விதா என, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகன் ஈஸ்வரனுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனவேதனையில் தந்தை மணிவேல் அதிக மது குடிப்பது வழக்கம். மணிவேல் மீன்பிடி, தடை காலம் என்பதால் தொழிலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டதை நேரில் பார்த்த தந்தை மனவேதனையில் வீட்டில், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.