மகள் மாயம் தந்தை புகார்
புதுச்சேரி: குடும்ப பிரச்னையில் கோபித்து சென்ற மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். லாஸ்பேட்டை, சாமிபிள்ளைத் தோட்டத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் மனைவி ேஹமா, 27. இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், கணவரிடம் கோபித்து கொண்டு, ேஹமா கடந்த 7ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை, உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, ஹோமாவின் தந்தை கன்னியப்பன் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ேஹமாவை தேடி வருகின்றனர்.