பாரதி பூங்கா குபேர் சிலை அருகே விளக்குகள் எரியாததால் அச்சம்
புதுச்சேரி; புதுச்சேரி பாரதி பூங்கா குபேர் சிலை அருகே தெருமின் விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதி ங்கா, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பாரதி பூங்கா மற்றும் கடற்கரை காந்தி திடலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பாரதி பூங்கா அருகே அமைந்துள்ள குபேர் சிலை அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு சென்று வருகின்றனர்.இதனால், எப்பொழுதும் கூட்ட நெரிசலுடன் காணப்படும் இப்பகுதி சாலையில் அமைக்கப்பட்டிருந்த தெருமின் விளக்குகள் கடந்த சில தினங்களாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குள் திருடு போனதுடன், வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.எனவே, புதுச்சேரி பாரதி பூங்கா குபேர் சிலை பகுதி சாலைகளில் ஏரியாமல் உள்ள தெருமின் விளக்குகளை உடனடியாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.