உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

பாகூர் : பாகூர் அடுத்த சின்ன கரையாம்புத்துார், செந்தில் நகரை சேர்ந்தவர் முருகானந்தம், 48; திருப்பூரில் டைலர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீராபாய், 42. மகன் புவனேஸ்வரராஜ், 20; மகள் இலக்கியா, 19. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், முருகானந்தம் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்தபோது, இலக்கியாவும், வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர். அதனால் சொந்த ஊரான சின்ன கரையாம்புத்துாருக்கு வந்து விட்டனர். சில நாட்களுக்கு முன், சின்ன கரையாம்புத்துாருக்கு வந்த முருகானந்தம், மனைவி, பிள்ளைகளை பார்த்து விட்டு, நேற்று முன்தினம் திருப்பூர் சென்றார். அன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இலக்கியா மின் விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின், பேரில் பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி