உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நிதிசார் கல்வியறிவு வார விழிப்புணர்வு

 நிதிசார் கல்வியறிவு வார விழிப்புணர்வு

புதுச்சேரி: இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், பொதுமக்களிடம் நிதி விழிப்புணர்வை அதிகரித்து, பாதுகாப்பான வங்கி சேவைகளை பயன்படுத்த வலியுறுத்தி, நிதிசார் கல்வியறிவு வாரம், கடந்த 9ம் தேதி முதல் நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, மாநில அளவிலான வங்கியாளர் கூட்டமைப்பு சார்பில், விழிப்புணர்வு நடைபயணம் கடற்கரை சாலை, காந்தி சிலையில் துவங்கியது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெங்கட சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் சுப்ரமணியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை பொது மேலாளர் ரவி சங்கர் சாகு, கிராம வங்கி தலைவர் ரத்தினவேல், முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை