குளத்தில் மூழ்கிய மூதாட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்பு
பாகூர்: குளத்தில் மூழ்கிய உயிருக்கு போராடிய மூதாட்டியை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பாகூர் தீயணைப்பு நிலையம் எதிரே விநாயகர் கோவில் குளம் உள்ளது. இக்குளத்தில் நேற்று மதியம் சுமார் 70 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடி உள்ளார். தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், குளத்தில் இறங்கி மூதாட்டியை பத்திரமாக மீட்டு பாகூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூதாட்டி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.