உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கான்பெட் நிறுவனத்தில் பட்டாசு கடை இன்று திறப்பு

கான்பெட் நிறுவனத்தில் பட்டாசு கடை இன்று திறப்பு

புதுச்சேரி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கான்பெட் அலுவலகத்தில் பட்டாசு கடையை முதல்வர் ரங்கசாமி இன்று திறந்து வைக்கிறார். புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான கான்பெட் சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கான்பெட் நிறுவனம் இரண்டு இடங்களில் பட்டாசு கடைகளை திறக்கிறது. இதில் தட்டாஞ்சாவடியில் உள்ள கான்பெட் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடையை முதல்வர் ரங்கசாமி இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து 13ம் தேதி 100 அடி ரோடு மேம்பால பணிக்காக கொக்கு பார்க் மைதானத்தில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. நிகழ்ச்சி முடிந்த பின், அன்று மாலையில் அங்குள்ள கமிட்டி குடோனில் கான்பெட் பட்டாசு கடையை முதல்வர் ரங்கசாமி திறந்து வைக்கிறார் என, மேலாண் இயக்குனர் அய்யப்பன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை