உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சூறாவளி காற்று எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

சூறாவளி காற்று எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

புதுச்சேரி : வட தமிழக பகுதிகளில் சூறாவளி காற்று வீச உள்ளதால் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென, மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் நேற்று 13ம் தேதி முதல் வரும் 17 ம் தேதி வரை, வட தமிழக சுடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே, புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாமல் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இதேபோல், காரைக்கால் மீனவர்களும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை துணை இயக்குநர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ