உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

புதுச்சேரி : சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் (பொ) தெய்வசிகாமணி செய்திகுறிப்பு:சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி, நேற்று தெற்கு வங்க கடல் மத்திய பகுதியில் நிலவி வந்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று நாகப்பட்டினத்திற்கு தெற்கு - தென் கிழக்கே 590 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு - தென் கிழக்கே, 710 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.இது வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று 27ம், புயலாக வலுபெறக்கூடும். அதைடுத்து, இரு தினங்களில் வடக்கு - வடமேற்கு திசையில், இலங்கை கடலோர பகுதியையொட்டி, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.அதன் காரணமாக, இன்று 27, நாளை 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில், இடையிடையே 75 கி.மீ. மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறவாளிக் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.,வேகத்திலும், வீசக்கூடும்.எனவே, புதுச்சேரி மீனவர்கள் இன்று முதல், மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மீனவர்கள் தங்களின் படகுகள், வலைகள், உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை