மேலும் செய்திகள்
சலவை தொழிலாளி கனவில் தோன்றிய லட்சுமி நரசிம்மர்
03-Nov-2026
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் ஹயக்ரீவர் கோவில் அருகே நவ நரசிம்மர் கோவில் அமைக்கும் திருப்பணி நடந்து வருகிறது. இங்கு, ஆந்திரா மாநிலம் அகோபிலத்தில் உள்ளது போன்று, (ஒன்பது) நவ நரசிம்மர்களையும் ஒரே க்ஷேத்திரத்தில் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் இக்கோவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவிலின் கொடிமரம் இன்று (நவ.,22) சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகா மண்டபம் 21 அடிக்கு மேல் உயரமாக அமைக்கப்படுவதால், அதற்கேற்ப கொடிமரமும் மகா மண்டபத்திற்கு உள்ளேயே அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கருட ரூபம் மற்றும் மகா கருட மந்திரத்துடன் ஆதார பீடமாக கொடிமரம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, நவதானியங்கள் மற்றும் நவரத்தினங்கள் சேர்த்து பிரதிஷ்டை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திர தாதம் மற்றும் சம்பத்குமார் செய்திருந்தனர்.
03-Nov-2026