மலர் கண்காட்சி அலங்கார போட்டி அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்
புதுச்சேரி: மலர் கண்காட்சியில் அரசு பள்ளி அளவில் முதலிடம் பிடித்த அன்னை சிவகாமி அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.புதுச்சேரி அரசுவேளாண் துறை சார்பில் 3 நாள் மலர், காய் கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நடந்தது. இதில், முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். ஜப்பானியர் மலர் அலங்கார பிரிவில், அரசு பள்ளிகள் இடையிலான போட்டியில் மாணவி லோகேஸ்வரி, தீபிகா முதலிடம் பிடித்தனர். தனி நபர் பிரிவில் மாணவி சவுமியா முதலிடமும், மாணவி பவுலாபோர்ஜியஸ் 2வது இடம் பிடித்தனர்.மலர் கண்காட்சி நிறைவு விழாவில் மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.பரிசு வென்ற மாணவிகளுக்கு பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் எழில்கல்பனா, மாணவிகள் மற்றும் வழியாட்டியாக செயல்பட்ட மனையியல் பிரிவு விரிவுரையாளர் தெய்வகுமாரி ஆகியோரை பாராட்டினார்.