உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மலர், காய், கனி கண்காட்சி ஆலோசனை கூட்டம்

 மலர், காய், கனி கண்காட்சி ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: வேளாண்துறை சார்பில், 36வது மலர், காய், கனி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. புதுச்சேரி வேளாண்துறை சார்பில், 36வது மலர், காய், கனி கண்காட்சி வரும் ஜனவரி 30, 31 மற்றும் 1ம் தேதி என, மூன்று நாட்கள் நடக்கிறது. கண்காட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்துறை செயலர் சவுத்ரி முகமது யாசின், கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் எஸ்.பி., கலைவாணன், நிதித்துறை துணை செயலர் ரத்ன கோஸ் கிஷோர், பட்ஜெட் அலுவலர் இளங்கோ, இணை இயக்குனர் சண்முகவேல், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் கணேசன், தோட்டக்கலை பிரிவு துணை இயக்குநர் சிவசுப்ரமணியன், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ரவி, ஒழுங்குமுறை விற்பனை கூட செயலர் ஜோசப் ஆல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !