உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாநில எல்லைகளில் பறக்கும் படை சோதனை 

 மாநில எல்லைகளில் பறக்கும் படை சோதனை 

புதுச்சேரி: கோரிமேடு எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, ஆம்னி பஸ்களை ஆய்வு செய்தனர். புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் 9ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர், துணை ராணுவத்தினருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி, கோரிமேடு எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர், துணை ராணுவத்தினருடன் இணைந்து வெளிமாநில வாகனங்கள், சுற்றுலா ஆம்னி பஸ்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு வரபடுகிறதா என தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், தேர்தலை முன்னிட்டு கட்சி கொடிகளுடன் வந்த கார்களில் இருந்த கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை