மேலும் செய்திகள்
அறிவியல் கண்காட்சி
2 minutes ago
மாவட்ட அளவில் தடகள போட்டி வரும் 16ம் தேதி நடக்கிறது
4 minutes ago
ஆவண பராமரிப்பு குறித்த பயிலரங்கம்
6 minutes ago
புதுச்சேரி: நச்சு பாம்பு கடியை அடையாளம் காணுவது குறித்து வனத் துறையில் டாக்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்பு கடியால் 58,000 பேர் இறக்கின்றனர். இதனால் பாம்புக்கடி நச்சுத்தன்மை ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய் என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.அதையடுத்து தேசிய சுகாதார இயக்கம் நாடு முழுவதும் பாம்பு கடி, அதன் சிகிச்சை குறித்து டாக்டர்கள், செவிலியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. புதுச்சேரி வனத் துறையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எந்த கடிக்கு எது மருந்து.... கால்நடை துறை இணை இயக்குநர் குமரன் பேசுகையில், 'எந்த பாம்பு கடித்ததென்று தெரிந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்பதில்லை. ரத்த உறையும் நேரத்தைக் கணக்கிட்டு எந்த வகைப் பாம்பு கடித்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். பாம்பு விஷக்கடிக்கான முறிவு மருந்தாக மருத்துமனைகளில் ஆன்டி-ஸ்நேக் விநோம் மருந்து தரப்படும். கடித்த பாம்புகளுக்கேற்ப விஷக்கடிக்கு சிகிச்சை முக்கியம். விஷத்தில் இரண்டு வகை. ஒன்று, நியூரோடாக்ஸின் என்ற விஷம். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மிக ஆபத்தானது. ராஜநாகம், நல்ல பாம்பு போன்ற பாம்புகள் கடிப்பதால் இந்த வகை விஷம் உடலில் ஏறும். 30 நிமிடத்தில் விஷமுறிவு மருந்து கொடுத்தால், கடிபட்டவரின் உயிரைக் காப்பாற்றிவிடலாம். மற்றொன்று, ஹீமோடாக்ஸின் என்ற விஷம். இது, ரத்த செல்களைப் பாதித்து ரத்த உறைதலைத் தடுக்கும் அல்லது ரத்த சிவப்பணுக்களை அழித்துவிடும். கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சாரைப்பாம்பு போன்ற பாம்புகள் கடித்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும்' என்றார். தொடர்ந்து நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மலைபாம்பு கடி குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
2 minutes ago
4 minutes ago
6 minutes ago