உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாஜி முதல்வரின் மகள் விருப்ப மனு

 மாஜி முதல்வரின் மகள் விருப்ப மனு

புதுச்சேரி: வரும் தேர்தலில், ராஜ்பவன் தொகுதியில், நிற்பதற்கு முன்னாள் முதல்வரின் மகள் விருப்ப மனு தாக்கல் செய்தார். புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில், நிற்பதற்கு, காங்., நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி மகள் விஜயகுமாரி, இவர் வரும் சட்டசபை தேர்தலில், காங்., சார்பில், ராஜ்பவன் தொகுதியில் நிற்பதற்கு, காங்., தலைமை அலுவலகத்தில், நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். இவர், கடந்த தேர்தலில், ராஜ்பவன் தொகுதியில், நிற்க, விருப்ப மனு தாக்கல் செய்தது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ