உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி துணை சபாநாயகருக்கு நெஞ்சுவலி

மாஜி துணை சபாநாயகருக்கு நெஞ்சுவலி

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் 2011, 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செல்வம். இவர் 2011 முதல் 2016ம் ஆண்டு வரை துணை சபாநாயகராக இருந்தார்.நேற்று காலை செல்வத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்த குழாயில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி