உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலதிபரிடம் மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

தொழிலதிபரிடம் மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழிலதிபரிடம் பணம் மோசடிசெய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேைஷ தொடர்பு கொண்ட சென்னையை சேர்ந்த முகமது ரபீக் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால், 8 சதவீத கமிஷன் மூன்று மணி நேரத்தில், இரட்டிப்பாக ஆக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பிய வெங்கடேஷ் தனது நண்பர் மகேஷூடன் நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் ரூ. 2 கோடி பணத்தை கடந்த 29ம் தேதி டி.ஆர். நகரில் வைத்து, பார்த்தசாரதி, முகமது ரபீக்கிடம் கொடுத்தார். பின், குறிப்பிட்ட நேரம் கடந்தும் பணம் இரட்டிபாகி திரும்பவில்லை. சந்தேகமடைந்த வெங்கடேஷ் பணம் திரும்ப வராதது குறித்து கேட்டுள்ளார். இதற்கிடையில், அந்த கும்பலில் இருந்தவர்கள், பணத்துடன் தப்பிக்க முயன்றனர். அதில், மூன்று கட்டப்பைகளில் இரண்டு பைகளை வெங்கடேஷ் எடுத்துக் கொண்டார். ஒரு பையை அந்த கும்பலில் இருந்தவர் எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டார். பணத்தை சரிபார்த்த போது, ரூ.88 லட்சம் பணம் பறித்து செல்லப்பட்டது தெரிந்தது. வெங்கடேஷ் புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 8 பேரை கைது செய்து ரூ.39 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ரூ.49 லட்சத்துடன் தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்ப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ