உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரை விற்று தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது

காரை விற்று தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது

புதுச்சேரி: காரைக்கால் நபரின் காரை விற்று தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் இன்று (நவ.,25) கைது செய்து சிறையில் அடைத்தனர். காரைக்கால், கோட்டுச்சேரி, பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் கணேஷ், 35; டிஜிட்டல் பிரின்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான காரை விற்பனை செய்ய முடிவு செய்து, நண்பரான வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியை சேர்ந்த விஜய், 38, என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது, விஜய் காரை கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி ஜிப்மர் அருகே எடுத்து வரும்படி கூறினார். கணேஷ் காரை புதுச்சேரிக்கு கொண்டு வந்தபோது, விஜய் காரை பார்வையிட்டு, ரூ.13.50 லட்சத்திற்கு விற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். இதைநம்பிய கணேஷ் காரை அவரிடம் ஒப்படைந்து விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து, மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.3.50 லட்சத்தை மட்டும் கணேஷிடம் வழங்கிய விஜய், மீதித் தொகையை வழங்காமலும், காரை இன்னும் விற்பனை செய்யவில்லை எனவும் கூறி வந்துள்ளார். பின், கணேஷ் விசாரித்தபோது, விஜய் ஏற்கனவே அந்தக் காரை விற்பனை செய்து விட்டது தெரியவந்தது. இது குறித்து விஜயிடம் கேட்டபோது, விஜய் தனது சகோதரர் மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி பத்மாவதி சவுந்தர்ய ஈஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து, பணத்தைத் தர முடியாது என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் தன்வந்திரி நகர் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, வில்லியனுார், திருக்காஞ்சியைச் சேர்ந்த விஜயை இன்று கைது செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !