போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
புதுச்சேரி: அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் மற்றும் வேவைாய்ப்பு துறை இயக்குநர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்காக, EMPLOYMENT EXCHANGE PUDUCHERRY எனும் யூடியூப் சேனல் வாயிலாக, ஆன்லைன் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு நாளை 9ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பு மூன்று மாதங்களுக்கு நடைபெறும். திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த வகுப்புகள் நடக்கும்.எனவே, அரசு வேலை வாய்ப்பை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.