மேலும் செய்திகள்
அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
8 minutes ago
மீன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
9 minutes ago
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்
10 minutes ago
7 பேரிடம் ரூ. 1.22 லட்சம் மோசடி
11 minutes ago
புதுச்சேரி: கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில் குழந்தைகள் பல் மருத்துவ பிரிவு சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பல் மருத்துவ துறை தலைவர் அருண் பிரசாத் ராவ் பேசுகையில், 'குழந்தைகள் இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் பல் துலக்குவதன் மூலம் பல் நோய்களை தவிர்க்கலாம்' என்றார். கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு பேசுகையில், 'குழந்தைகள் பல் மருத்துவ பிரிவில் குழந்தைகளுக்கு பல் சொத்தை அடைத்தல், வேர் சிகிச்சை, பல் துருத்தலுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்காக மாலை நேர சிறப்பு சிகிச்சை பிரிவு தினமும் மாலை 3:30 முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை சார்பில், பல் மருத்துவ வாகனம் மூலம் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு இலவச சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் எங்களை நேரில் அணுகி இந்த சேவையை பெறலாம்' என்றார். தொடர்ந்து குழந்தைகளுக்கு வாய் சுகாதாரம் குறித்த ஓவியப்போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. பல் துலக்கும் முறைகள் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
8 minutes ago
9 minutes ago
10 minutes ago
11 minutes ago