ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் நாளை இலவச சிகிச்சை முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி, முத்தியால்பேட்டை காந்தி வீதி, பெருமாள் கோவில் அருகில் உள்ள ஆர்ச்சிட் பிசியோதெரபி சிகிச்சை மையத்தில், நாளை 1ம் தேதி இலவச பிசியோதெரபி சிகிச்சை முகாம் நடக்கிறது. முகாமில் டிஸ்க் விலகல், சியாட்டிகா உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. முகாமில், பிசியோதெரபி நிபுணர் ராஜா சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகிறார்.பிசியோதெரபி நிபுணர் ராஜா கூறுகையில், 'கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, தடுப்பு முறை சிகிச்சையாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள சிகிச்சை முறைதான் பிசியோதெரபி மருத்துவம். மருந்து இல்லா மருத்துவம், அறுவை சிகிச்சை இல்லா மருத்துவம், பக்க விளைவு இல்லா மருத்துவம், எளிய முறை மருத்துவம் பிசியோதெரப்பி மருத்துவம் ஆகும். இது இயன்முறை மருத்துவம் எனப்படுகிறது. மூட்டு வலி, முதுகு தண்டு வட பிரச்னைகளால் ஏற்படும் வலிகளைத் தடுக்க அறுவை சிகிச்சைகள் தேவையில்லை. பிசியோதெரபி மருத்துவத்தால் குணப்படுத்த முடிவதோடு பக்க விளைவுகள் இல்லாததும், வரும் முன் காக்கும் சிகிச்சையாகவும் பிசியோதெரபி இருக்கிறது. அந்த மருத்துவத்தை பற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இலவச பிசியோதெரபி சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இம்முகாமில் எலும்பு சம்பந்தமான தோள்பட்டை வலி, கழுத்து, முதுகு வலி, மூட்டு, குதிகால் வலி, எலும்பு முறிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் பிரச்னைகள், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள், பக்கவாதம், முகவாதம், சியாட்டிகா போன்ற பிரச்னைகளுக்கு ஆலோசனை பெறலாம்' என்றார்.முகாம் காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. முகாமில் பங்கேற்க விரும்புவோர், 95007--12391, என்ற மொபைல் எண்ணில் முன்பதிவு செய்யலாம்.