அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் காய்கறிகள், பழங்கள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வட்டம் 1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து பார்வையிட்டார். விழாவில், பள்ளி மாணவர்கள் பல்வேறு காய்கறிகள், பழங்களின் கலை வடிவங்களை செதுக்கி காட்சிக்கு வைத்தனர். இதனை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை முன் மழலை ஆசிரியைகள் கனிமொழி, தேவி, சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.