உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய கவர்னர் மாளிகையில் நாளை கணபதி ேஹாமம்

புதிய கவர்னர் மாளிகையில் நாளை கணபதி ேஹாமம்

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகை, நாளை முதல் கடற்கரை சாலையில் கட்டப்பட்டுள்ள கலாசார மைய கட்டடத்திற்கு மாறுகிறது.புதுச்சேரி கவர்னர் மாளிகை, கடற்கரை சாலையில் சட்டசபை அருகே அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இக்கட்டடம் வலுவிழந்து, ஆபத்தான நிலையில் உள்ளது.இந்த பழமையான கட்டடம், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. அதனையொட்டி, கவர்னர் மாளிகையை தற்காலிகமாக, கடற்கரை சாலையில் உள்ள பழைய சாராய ஆலை வளாகத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி செலவில் சுற்றுலா பயணிகளுக்காக கட்டப்பட்ட கலாசார மையத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில் கவர்னர் மாளிகை மற்றும் அலுவலகத்திற்கு ஏற்றார் போல் கலாசார மைய கட்டடங்களை மாற்றம் செய்து, எலக்ட்ரிக்கல் பணிகள் செய்து முடிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து கவர்னர் மாளிகையை தற்காலிகமாக புதிய கட்டடத்திற்கு மாற்றுவதற்காக நாளை (23ம் தேதி) காலை, கணபதி ேஹாமம் நடக்கிறது. முன்னதாக இன்று (22ம் தேதி) இரவு வாஸ்து பூஜை நடக்கிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நாளை கணபதி ேஹாமம் முடிந்த பின், புதிய கட்டடத்திற்கு கவர்னர் அலுவலகம் மற்றும் குடியிருப்பும் மாற்றம் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ