முதல்வர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை
புதுச்சேரி: முதல்வர் அலுவலகத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில், முதல்வர் ரங்கசாமி வழிப்பட்டார். சட்டசபையில் முதல்வர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று பூஜை செய்யப்பட்டது. முதல்வர் ரங்கசாமி, நேற்று காலை 10.30 மணிக்கு விநாயகருக்கு பூஜைகள் செய்து, வழிபட்டார். தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பாஸ்கர் எம்.எல்.ஏ., அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.