உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நல்லாட்சி வார விழிப்புணர்வு ஊர்வலம்

நல்லாட்சி வார விழிப்புணர்வு ஊர்வலம்

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், நல்லாட்சி வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் திருக்கனுாரில் நடந்தது.திருக்கனுார் சுப்ரமணிய பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை ஆணையர் எழில்ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பள்ளியின் தாளாளர் சம்பத் சிறப்புரையாற்றினார். இதில், கொம்யூன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், ஊழியர்கள் மற்றும் ஹெச்.ஆர். ஸ்கொயர் நிறுவன துாய்மைப் பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தில், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்தக் கூடாது. குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி, திருக்கனுார் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ