உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதியார் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மரியாதை

பாரதியார் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரியில் பாரதியார் பிறந்தநாளையொட்டி அவரது உருவசிலைக்கு கவர்னர், முதல்வர் மரியாதை செலுத்தினர்.புதுச்சேரி அரசு சார்பில், பாரதியாரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாரதி பூங்கா அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமி காந்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாரதி நினைவு அருங்காட்சியகத்தில், அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ரங்கசாமி தலைமையில் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.பாரதி பூங்காவில் உள்ள பாரதியாரின் சிலைக்குப் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் பாரதி தலைமையில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை