மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
புதுச்சேரி: சித்ரா பவுர்ணமியையொட்டி, புதுச்சேரி மகா சமுத்திர ஆரத்தி சேவா சங்கம் சார்பில், சிறப்பு மகா சமுத்திர ஆரத்தி பூஜை கடற்கரை சாலை, தலைமை செயலகம் எதிரில் நடந்தது. இதையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு சிவ வாத்தியங்கள் முழங்க நிகழ்ச்சி தொடங்கியது. சுமங்கலி பெண்கள் அகல் விளக்குகேற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினர். தொடர்ந்து மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு வழிபட்டார். மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம், செல்வம் எம்.எல்.ஏ., மற்றும் இந்து முன்னணியினர், சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.