ஆம்புலன்ஸ் மூலமாக சேவை: கவர்னர் விருது வழங்கல்
புதுச்சேரி: ஆம்புலன்ஸ்சில் பொதுமக்களுக்கு சேவை செய்தவருக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் விருது வழங்கி பாராட்டினார். புதுச்சேரியில், ஒவ்வொரு ஆண்டும், போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதனையெடுத்து, நேற்று கடற்கரை சாலையில், போக்குவரத்துத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழா நடந்தது. அதில், புதுச்சேரியை சேர்ந்தமணிகண்டன்என்பவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம்,அவரச சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளை, கடந்த 10 ஆண்டுகளாக அழைத்து சென்று வருகிறார். இவரது சேவையை பாராட்டி, கவர்னர் கைலாஷ்நாதன்,விருது வழங்கி மணிகண்டனை பாராட்டினார். சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் அவரை பாராட்டினர்.