உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் இன்று குறை தீர்வு முகாம்

இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் இன்று குறை தீர்வு முகாம்

புதுச்சேரி : தொழிலாளர் காப்பீட்டு கழக மண்டல அலுவலகத்தில், (இ.எஸ்.ஐ) இன்று குறை தீர்வு முகாம் நடக்கிறது. இதுகுறித்து, மண்டல இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு; ஒவ்வொரு மாதம் 2வது புதன்கிழமை குறை தீர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மதியம் 3:30 மணி முதல் 4:30 மணி வரை, புதுச்சேரி தொழிலாளர் காப்பீட்டு கழக மண்டல அலுவலகத்தில் (இ.எஸ்.ஐ) குறை தீர்வு முகாம் நடக்கிறது. தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர்கள், தங்கள் இ.எஸ்.ஐ., சம்பந்தமான கோரிக்கைகள் இருந்தால், விரிவாக ஒரு கடிதத்தில், தக்க ஆணவங்களுடன் முகாமில் சமர்ப்பிக்கலாம். கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு அதற்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ