உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குரு சித்தானந்த சுவாமிகள் :189 ஆண்டு பழமையான தேவஸ்தானம்

குரு சித்தானந்த சுவாமிகள் :189 ஆண்டு பழமையான தேவஸ்தானம்

கோவிலின் சிறப்பு அம்சம்: 189 ஆண்டு பழமையான தேவஸ்தானம். வினாயகர்: திருத்தல விருட்சம்: பன்னீர் மரம் இதர சன்னதி: சுந்தர கணபதி, ஸ்ரீ குரு தட்ணாமூர்த்தி, ஸ்ரீ ஐயப்பன் கோபுர உயரம்: 42 அடி கோவில் அமைவிடம்: கருவடிக்குப்பம், புதுச்சேரி -8 நேர்த்திகடன்: திருமண தடை, குழந்தை பேறு போன்றவைகளுக்கு தேங்காய் உடைத்து இரண்டு மூடிகளில் நல்லெண்ணெய் தீபம், திங்கள் கிழமையில் வழிபாடு செய்வது சிறப்பு. திங்கள் கிழமையில் அரச மர பிரதட்சனம் செய்வது சிறப்பு. பிரார்த்தனை: எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன. திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் நன்மை கிடைக்கும். தொழில் தொடங்குவோர் திருமண பத்திரிகை வைத்து வழிபடுபவர்கள் இங்கு அதிகம். இந்து மதம் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் இங்கு வருவது சிறப்பு. திருவிழாக்கள்: ஆங்கில புத்தாண்டு, மகா சிவராத்திரி, மகா சங்கடஹர சதுர்த்தி, குருபூஜை, அன்னாபிேஷம், சங்காபிேஷகம், ஆருத்ரா தரிசனம், பிரதி மாத பிரதோஷம் இருமுறை, பவுர்ணமி இரவு அபிேஷகம். பூஜை அபிேஷக நேர்த்திக் கடன் கட்டண விபரம்: ----------------------------------------- அனைத்து சுவாமிகளும் அபிேஷகம் ரூ. 3,000 சந்தனகாப்பு ரூ. 3,000 வெண்ணெய் காப்பு ரூ. 4,000 தொன்னை பிரசாதம் ரூ. 1,500 வடை பாயாசத்துடன் அன்னதானம் ரூ. 12,500180 நபர் பிரதோஷ உபயம் ரூ.7,500 கோசாலை தீவனம் (பக்தர்கள் விருப்பம்) வினாயகர் அபிேஷகம் ரூ.1,000 குரு தட்சணாமூர்த்தி அபிேஷகம் ரூ.1,000 ஐயப்பன் அபிேஷகம் ரூ.1,500 அரச மர பிரதட்சனம்: இங்கு அமைந்துள்ள அரச மரம் மற்றும் வேம்பு மரம் மிகவும் பழமையானது. அந்த மரத்தை சுற்றி நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த மரத்தினை 108 முறை பிரதட்சனம் செய்து பிரார்த்தனை செய்வார்கள். மேலும், சோமவாரங்களில் (திங்கள் கிழமை) வரும் அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் திருமணம் வரம் வேண்டி ஆண், பெண் இருபாலரும் மஞ்சள் நுால் கையில் ஏந்தி இம் மரத்தினை சுற்றி தங்களது பிரார்தினை செலுத்துவர் இந்தாண்டு திங்கள் கிழமைகளில் வரும் அமாவாசை வருவது சிறப்பு. பாரதியார் தகவல்கள்: பாரதியார் புதுவை இருந்த காலத்தில் தினசரி நமது தேவஸ்தானத்தில்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !