மேலும் செய்திகள்
குட்கா விற்பனை : 3 பேர் மீது வழக்கு
07-Feb-2026
புதுச்சேரி: வடமங்கலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது வடமங்கலம் பகுதியில் உள்ள கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்த சென்று அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் வில்லியனுார் காணுவாபேட் பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து, கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
07-Feb-2026