உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது

அரியாங்குப்பம்: மளிகை கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர். வீராம்பட்டினம், மாஞ்சாலை சாலையில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். கடையில் குட்கா, சிகரெட் பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்து, 500 ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் லட்சுமணன், 55, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை