உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.16,000 குட்கா பறிமுதல் 

ரூ.16,000 குட்கா பறிமுதல் 

பாகூர் : மணமேடு கிராமத்தில், பெட்டி கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில், 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கரையாம்புத்துார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். மணமேடு கிராமத்தில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. தென்பெண்ணையாறு சாலையில் உள்ள பெட்டி கடைகளில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அதில், 8 பெட்டி கடைகளில் இருந்து மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, பெட்டிக்கடை உரிமையாளர்களான அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் 62; தனிகாசலம், கலியமூர்த்தி 65; ரஞ்சித் 36; அன்பழகன் 65; மாயக்கிருஷ்ணன் 52; கதிரேசன் 56; விஜயன் 60; ஆகியோர் மீது கரையாம்புத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி