உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.1.50 லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது

ரூ.1.50 லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் குட்கா விற்ற இருவரை கைது செய்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி, தன்வந்திரி நகர், மகாத்மா காந்தி சந்திப்பு பகுதியில் குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தன்வந்திரி நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர்.அப்போது ஒருவர் இருசக்கர வாகனத்தில் குட்கா பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். பாக்கமுடையன்பேட், ஜெயக்குமார், 46, என்பதும், இவர் அவரது நண்பர் மகாத்மா நகரை சேர்ந்த குலாப் பாஷா, 43, என்பவருடன் சேர்ந்து தடை செய்யப்பட குட்கா விற்றதை ஒப்புக் கொண்டனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை