உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை

பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை

புதுச்சேரி : துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று மதியத்திற்கு மேல் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பள்ளி கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை:துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் புதுச்சேரி வருகையையொட்டி, போக்குவரத்து ஏற்பாடாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று 16ம் தேதி மதியம் 2:00 மணியுடன் பள்ளிகளை முடித்துக்கொள்ள வேண்டும். இதனை பள்ளி ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகள் 2 மணியுடன் முடிகின்ற சூழ்நிலையில் பள்ளி கல்வித் துறையின் கீழ் உள்ள போக்குவரத்து பிரிவு மாணவர் பஸ்களை அதற்கேற்ப திட்டமிட்டு இயக்க வேண்டும். மாணவர்களுக்கு எந்த அசவுகாரியமும் ஏற்பட கூடாது என, கூறப்பட்டுள்ளது.

மாகியில் இன்று விடுமுறை

கனமழை எதிரொலியாக, புதுச்சேரி பிராந்தியம் மாகியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.இது குறித்து மாகே பிராந்தியம் மண்டல நிர்வாக அதிகாரி மோகன் குமார் செய்திக்குறிப்பு:கேரளா மாநிலம், கோழிக்காடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அப்பகுதியில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி பிராந்தியமான மாகியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்ய வேலை நாள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ