உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கு இணைய தளத்தில் ஹால் டிக்கெட்

 தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கு இணைய தளத்தில் ஹால் டிக்கெட்

புதுச்சேரி: தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான ஹால்டிக்கெட் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வு வரும் 18ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரையிலும், இரண்டாமாண்டு தேர்வுகள் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி விபரங்களை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை