கோரிக்கைகளை வலியுறுத்தி அல்வா கொடுக்கும் போராட்டம்
புதுச்சேரி :நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு போராட்ட குழு சார்பில், அல்வா கொடுக்கும் போராட்டம் நடந்தது.புதுச்சேரி உள்ளாட்சி துறை முன், நேற்று காலை 10:00 மணியளவில் கூட்டு போராட்டக்குழு ஆலோசகர் ஆனந்த கணபதி தலைமையில் அல்வா கொடுக்கும் போராட்டம் நடந்தது. கன்வீனர்கள் வேளாங்கண்ணிதாசன், கலியபெருமாள், முருகையன், சகாயராஜ், மன்னாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், பொதுச் செயலாளர் முனுசாமி, மாநில தலைவர் பாலாஜி, பொருளாளர் அந்தோணி, பொறுப்பாளர்கள் அசோகன், ஆனந்தராஜன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக்குழு பரிந்துறைப்படி, 33 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும். நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில், பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசு நேரடியாக பென்ஷன் நிலுவை தொகைகள் வழங்க நிதி ஒதுக்க வேண்டும். நகராட்சி, மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து ஊழியர்களையும் பணி நிரந்தம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.