உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வைக்கோல் போர் எரிந்து சேதம்

வைக்கோல் போர் எரிந்து சேதம்

திருபுவனை: திருபுவனையில் வைக்கோல் போர் எரிந்து சேதமானது.திருபுவனை, வாட்டர் டேங்க் வீதியை சேர்ந்தவர் ஜெயபால் மகன் புகழேந்தி; விவசாயி. நெல் அறுவடை செய்த விவசாய நிலங்களில் இயந்திரம் மூலம் சுருட்டப்பட்ட ரூ.40 ஆயிரம் மதிப்பிலான வைக்கோலை தோட்டத்தில் சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில் வைக்கோல் போர் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த திருபுவனை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதில், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வைகோல் எரிந்து சேதமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை