உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் நிலைய கட்டுமானத்தில் ஊழல் உயர் மட்ட விசாரணை தேவை: மா.கம்யூ.,

பஸ் நிலைய கட்டுமானத்தில் ஊழல் உயர் மட்ட விசாரணை தேவை: மா.கம்யூ.,

புதுச்சேரி : புதிய பஸ் நிலைய கட்டுமான பணியில் நடந்துள்ள ஊழல் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என, மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து மாநில செயலாளர் ராமச்சந்திரன் அறிக்கை: புதுச்சேரி நகராட்சி பஸ் நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டது. பஸ் நிலையம் திறப்பு விழாவில், கவர்னர், முதல்வர், சபாநாயகர், கவர்னர் என மூன்று பேர் திறந்து வைத்தது கோமாளித்தனமாக உள்ளது.இதற்கிடையே, முதல்வர் ரங்கசாமி வேறொரு இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவோம். அதற்கு அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் வைப்போம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத் திறப்பு விழாவில் பா.ஜ., - என்.ஆர்.காங்., ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது.பஸ் நிலையம் திறப்பு விழா தள்ளிப்போனதில் கட்டுமானப் பணிகளில் கோடிக்கணக்கில் நடந்த ஊழலும் ஒரு காரணமாகும். அண்மையில் நடந்த தலைமை பொறியாளர் கைது, ஜாமீன், சி.பி.ஐ., நடவடிக்கை ஆகியவற்றிற்கும் இதற்கும் தொடர்பு உண்டு. ஊழல் குறித்து உயர்மட்ட விசாரணை வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை