மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
03-Dec-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கையாக கடந்த 27 ம் தேதி முதல் பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று 3ம் தேதி பள்ளி, கல்லுாரிகள் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். பின், முதல்வருடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, வீடூர் அணை திறப்பால் கிராமப்புற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுவதால் பாதுகாப்பு கருதி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று 3ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
03-Dec-2024