உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

 அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை அரசு துணை செயலர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி சட்டசபை தேர்தல் 9ம் தேதி தேர்தல் பணியிலும், வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை பணியிலும் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தேர்தல் நாளுக்கு அடுத்த நாளான 10ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை நாளுக்கு அடுத்த நாளான 5ம் தேதியும் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என, தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை