ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹோமியோபதி தினம்
புதுச்சேரி: குயவர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ேஹாமியோபதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஹோமியோபதியின் தந்தை என அழைக்கப்படும் ஜெர்மன் டாக்டர் கிறிஸ்டியன் மிரட்ரிக் சாமுவேல் ஹானிமன் பிறந்த நாளை உலக முழுவதும் ஹோமியோபதி தினமாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, குயவர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், டாக்டர் உமாமகேஸ்வரி வரவேற்றார். முதன்மை மருத்துவ அதிகாரி செல்வி, சாய் ஆனந்த், பொது சுகாதார செவிலியர் முருகம்மாள் கலந்து கொண்டு, ஹோமியோபதி முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டது. கிராமப்புற செவிலியர்கள் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.