ஐ.இ.இ.இ. ஐ.சி.ஸ்கேன்- 2024 சர்வதேச கருத்தரங்கம்
புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லுாரி) அனைத்து பொறியியல் துறை சார்பில், 6வது ஐ.இ.இ.இ. 'ஐ.சி.ஸ்கேன் 2024' சிஸ்டம்ஸ், கம்ப்யூடேஷன், ஆட்டோமேஷன் மற்றும் நெட் வொர்க்கிங் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.ஜப்பான், குமமோடோ பல்கலைக்கழக பேராசிரியர் தகாஷி வடன்பே கலந்து கொண்டு, பல துறைசார் கூட்டு ஆராய்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து பேசினார்.நேபாளம், மனிதவள மேம்பாட்டு மைய தலைவர் ஷியாம் ஷரண் ஷ்ரேஸ்தா, அமெரிக்கா இன்டெல் லேப்ஸ் முதன்மை பொறியாளர் செல்வகுமார் பன்னீர், ஹைதராபாத் எஸ்.வி.இ.எஸ்.கல்வி நிறுவன பேராசிரியர் ராஜூ ஏட்லா கருத்துரை வழங்கினர்.முன்னதாக, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர் வள்ளி கருத்தரங்க செயல்பாடு பற்றி விளக்கம் அளித்தார். கருத்தரங்கில், சர்வதேச மற்றும் இந்திய அளவில் சமர்ப்பிக்கப்பட்ட 873 ஆய்வுக் கட்டுரைகளில், சர்வதேச தர மதிப்பாய்விற்கு 120 கட்டுரைகள், இரட்டை தர மதிப்பாய்விற்கு 180 ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. கருத்தரங்கில் 18 அமர்வுகள் நடந்தன. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் அருண் மொழி நன்றி கூறினார்.