உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கள்ளு குடிச்சா சஸ்பெண்ட் ஜெயிலுக்கு போனா இல்லையா? குமுறும் காக்கிகள்

 கள்ளு குடிச்சா சஸ்பெண்ட் ஜெயிலுக்கு போனா இல்லையா? குமுறும் காக்கிகள்

போ லீஸ் வேனில் 'கள்' குடித்து ஆட்டம் போட்ட ஏனாம் இன்ஸ்பெக்டர் அதிரடியாக நேற்று முன்தினம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஆனால், அதேநேரத்தில், பொது இடத்தில் வழிமறித்து தகராறு செய்து, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்த வழக்கில், கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டரை 'சஸ்பெண்ட்' செய்யாதது, போலீஸ் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர், குற்ற வழக்கில் கைதானாலே, 'சஸ்பெண்ட்' செய்வது வழக்கம். அதுவும், போலீஸ் துறையில், அதிகாரிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலே 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர். ஆனால், உள்துறை அமைச்சர் முன்னிலையில், பொது இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரை வழிமறித்து தகராறு செய்து, சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஐ.ஆர்.பி.என்., சீனியர் கிரேடு சப் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைத்து 15 நாட்களுக்கு மேலாகியும், அவர் மீது ஓழுங்கு நடவடிக்கை எடுக்காதது, புதுச்சேரி போலீஸ் வட்டாரத்தில் குறிப்பாக இன்ஸ்பெக்டர்கள் மத்தியில் பெரும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி