உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீங்க டில்லி போனா பிரதமரே உருகிடுவா;ர் ஜான்குமார் எம்.எல்.ஏ., லக.. லக..

நீங்க டில்லி போனா பிரதமரே உருகிடுவா;ர் ஜான்குமார் எம்.எல்.ஏ., லக.. லக..

புதுச்சேரி; பூஜ்ய நேரத்தில் ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:மாநிலத்தில் 1.70 லட்சம் பேருக்கு முதியோர் பென்ஷன் தருகிறோம். இதற்காக பல கோடி ரூபாய் செலவழித்து வருகிறோம். ஆனாலும் நமக்கு நிதி நெருக்கடி இருக்கிறது.வாங்கிய கடனுக்கு ரூ.1,200 கோடி வட்டியாக கட்டுகிறோம். எனவே முதல்வர் தலைமையில் என்.ஆர்.காங்., - பா.ஜ., என அனைவரும் பிரதமரை சந்தித்து புதுச்சேரி கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.அப்படி தள்ளுபடி செய்தால் கூடுதலாக 6 ஆயிரம் ரூபாய் சேர்த்து 8,500 ரூபாயாக முதியோர் பென்ஷன் தர முடியும். வட்டியாக போவதை மக்களுக்கு திருப்பி கொடுக்கலாம். முதல்வர் தன்னை சாதாரணமாக நினைத்து கொள்கிறார். ஆனால் பா.ஜ., வை பொருத்தவரை முதல்வர் ரங்கசாமி மிகப்பெரிய மகான். புனிதர், சித்தர் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் நீங்க தான் அங்க 'டச்' பண்ணமாட்றீங்க. அப்படி நீங்க டில்லி சென்றால் பிரதமரே உருகி கடனை தள்ளுபடி செய்துவிடுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை